யாழில் கொரோனா தொற்றாளரின் தாய் தூக்கில்!


 யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவரின் குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

பருத்தித்துறை புலோலி பகுதியில் இந்த துயர சம்பவம் நடந்தது.

அண்மையில் அந்தப் பகுதியில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அவரது சகோதரன் உள்ளிட்ட சிலர், தொற்றாளரின் பெற்றோரின் வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

பெற்றோர் அயல்வீட்டில் வசித்து வந்தார்கள்.

நேற்று அவர்களிற்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

உயிரை மாய்ப்பது பிரச்சனைகளிற்கு தீர்வல்ல என்பதால், தற்கொலை எண்ணமுடையவர்களிற்கு உதவுவதற்கு பல்வேறு அமைப்புக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.