சிறைச்சாலைகளில் மேலும் 17 பேருக்கு கொரோனா!!
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து மேலும் 17 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
16 ஆண் கைதிகளும், சிறைச்சாலை அதிகாரியொருவருமே இவ்வாறு கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சிறைச்சாலை கொத்தணியில் சிக்கிய கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையானது 4,310 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 123 சிறை அதிகாரிகளும் 3,945 கைதிகளும் பூரண குணமடைந்துள்ள நிலையில் ஒன்பது அதிகாரிகளும் 233 கைதிகளும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை