கொழும்பில் 19,000 இற்கும் அதிக தொற்றாளர்கள்!


 கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்போது கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை இப்போது 19,000 ஐ கடந்துள்ளது.

இலங்கையில் நேற்று 522 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதில் 206 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

கொழும்பில் இதுவரை 19,196 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திலிருந்து 97 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 81 பேரும், காலி மாவட்டத்திலிருந்து 28 பேரும், குருநாகல் மாவட்டத்திலிருந்து 27 பேரும், அம்பாறை மாவட்டத்திலிருந்து 24 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

பொலன்னருவை மாவட்டத்திலிருந்து 17 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 13 பேரும், இரத்னபுரி மாவட்டத்திலிருந்து 12 பேரும், கண்டி மாவட்டத்திலிருந்து 7 பேரும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 5 பேரும், யாழ் மாவட்டத்திலிருந்து 3 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து ஒருவரும், வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.