மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!


 ஜாஎல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு முன்னால் உள்ள அறையில் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த பெண் அதற்கு முன்னரே உயிரிழந்துள்ளார். தனது மகளுக்கும் மற்றுமொரு சிறுமிக்கும் ஒன்லைன் கற்கை நடவடிக்கைக்கு குறித்த பெண் உதவியுள்ளார்.

திடீரென அடுத்த அறைக்கு சென்ற பெண் அங்கு விழுந்து கிடந்துள்ளார். மனைவிக்கு என்ன நடந்ததென பார்க்க சென்ற கணவருக்கு ஒரு பக்கத்தில் விழுந்து கிடந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் கையில் மின்சாரம் தாக்கியதாக சந்தேகிக்கும் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை ராகம வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.