அரிசி ஆலை ஒன்றின் கூரை மேல் ஏறித் தவறுதலாக விழுந்து பலியான நபர்!


 ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரிசி ஆலை ஒன்றின் கூரை மேல் ஏறித் தவறுதலாக விழுந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (19) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் அக்குறனை -07ம் கட்டை பகுதியைச் சேர்ந்த முஹம்மத் யூசுப்முஹம்மத் புஹாரீ (60 வயது) எனவும் தெரிய வருகின்றது.

ஹொரவ்பொத்தானை பிரதேசத்திலுள்ள பொப் மில் என்றழைக்கப்படும் அரிசி ஆலையில் போடப்பட்டிருந்த சீட் உடைந்த நிலையில் கிடந்ததாகவும், அதனை மாற்றுவதற்காகக் கூரை மேல் ஏறிய நிலையில் தவறுதலாக விழுந்துள்ளார். இதன்போது கழுத்து உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.