8 வயது சிறுவனை வன்கொடுமை செய்த சிறுவர்கள் கைது!


 8 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஏழு சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 16, 17 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களாவர்.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக நாகொட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனின் தந்தை மறுமணம் செய்து வேறு பகுதியில் வசித்து வருகிறார். தாய் வெளிநாட்டில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது பாட்டி மற்றும் தாத்தாவின் கீழ் இருந்த சிறுவனுக்கு சில நாட்களுக்கு முன்பு, சந்தேகநபர்களில் ஒருவர் புறாவைக் கொடுத்து, அவரை ஏமாற்றி, அருகிலுள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதை அறிந்த சந்தேகநபரின் ஏனைய நண்பர்கள் அவ்வப்போது சிறுவனுக்கு புறாக்களை வழங்குவதாக தவறான வாக்குறுதிகளை வழங்கி அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தாத்தா தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.