பாலாஜி டைட்டில் வின்னராகததால் கதறி அழும் சிறுவன்!


 பிக்பாஸ் போட்டியில் பாலாஜியின் வெறித்தனமான சிறு வயது ரசிகரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகர் ஆரி வின்னராகவும், பாலாஜி முருகதாஸ் ரன்னராகவும் அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து இணையத்தில் பல்வேறு மீம்ஸ்கள் வலம் வந்து வைரல் அடித்து வருகிறது.

மேலும் இந்நிலையில் பிக்பாஸ்-ல் ஏன் பாலாஜி டைட்டில் வின்னராக அறிவிக்கப்படவில்லை என அவரது தீவிர ரசிகரான சிறுவன் ஒருவர் கதறி அழுதுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அத்தோடு இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள், இதுதான் பாலாஜியின் வெற்றி என்றும், பிக்பாஸ்-ன் ரியல் வின்னர் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாலாஜிக்காக சிறுவன் கதறி அழும் வீடியோ இணையத்தில் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜிக்கு இப்படியொரு ரசிகரா என வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.