தமிழ் மாணவிகள் தொடர்பில் வதந்தி பரப்பும் சிங்கள விசமிகள்!


 பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவிகளின் மரணம் தொடர்பில் தென்னிலங்கையில் உள்ள சில சிங்கள ஊடகங்களில் வன்மத்தை தோற்றுவிக்கும் விதமாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளமை உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு சோகத்தின் மேல் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாணவிகளின் உயிரிழப்பால் பெரும் சோகத்தில் உள்ள அக்குடும்பங்களிற்கு இவ்வாறு வெளியான உண்மைக்கு புறப்பான செய்திகளினால் அவர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த மாணிவிகளின் மரணம் தொடர்பில் பிரான்ஸ் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.