டிக்கோயாவில் 3 வயது சிறுவனுக்கு கொரோனா!


 டிக்கோயா வனராஜா கீழ் பிரிவில் மூன்று வயது சிறுவனுக்கு தொற்று உறுதியானதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தலைமை வைத்திய அதிகாரி டி.சந்திரராஜன் தெரிவித்தார் .

குறித்த சிறுவனுக்கு 17 ஆம் திகதி சுகயீனம் ஏற்பட்டதையடுத்து டிக்கோயா நகரிலுள்ள தனியார் சிகிச்சை நிலையத்திற்கு சிகிச்சைக்காக பெற்றோர்களால் அழைத்து சென்றதையடுத்து சிறுவனின் உடல் நிலை மோசமாக இருப்பதை அவதானித்த தனியார் வைத்தியசாலையின் வைத்தியர் உடனடியாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவித்துள்ளார்.

இதனைடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக மேற்கொண்ட என்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

சிறுவனுக்கு சிகிச்சையளித்த இரண்டு வைத்தியர்கள் நான்கு தாதியர்கள் மூன்று ஊழியர்கள் என 09 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டதுடன் டிக்கோயா நகரிலுள்ள தனியார் வைத்திய நிலையத்தின் வைத்தியர் மற்றும் அவரது குடும்பத்தினரும் சுயதிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் ஏற்கனவே 30 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இன்று (18) பி.சிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை தொற்றுக்குள்ளான சிறுவனின் வீட்டில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மரண சடங்கிற்கு கொழும்பிலிருந்து மூவர் வந்துள்ளதாகவும் அவர்களினூடாகவே சிறுவனுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் வனராஜா கீழ் பிரிவில் 09 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் டி.சந்திரராஜன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.