மாமாங்கேஸ்வரர் ஆலய பிரமத குருக்களின் வீட்டை உடைத்து கொள்ளை!


 மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரமத குருக்களின் வீட்டை உடைத்து கொள்ளையிட்ட ஆலய குரு ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

அத்துடன் அவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்

குறித்த ஆலயத்தின் குருக்கல் அவரது மனைவி ஆகிய இருவரும் சம்பவதினமான நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று பகல் 1.30 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு தங்க ஆபரணங்கள் திருடப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் எம்.ஜி.பி.எம். முகமட் ஜெஸலி தலைமையில் மேற்கொண்ட விசாரணையில் ஆலையங்களில் உதவி குருக்களாக கடமையாற்றி வந்த 29 வயதுடை சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் அவரிடம் இருந்து கொள்ளையிட்ட 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களையும் மீட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.