யாதும் ஊரே"என்று முழங்குவோம் வாருங்கள்.!!
அவர்களும்"மனிதர்கள்"
என்பதை
மறந்தவர்கள்!
கொன்றது
கடல் புத்தர்கள்.
அவர்கள்-
தமிழர்களை
மனிதராசியாக
ஏற்கவில்லை,
என்பது
இன்னுமாஇவர்களுக்கு
புரியவில்லை?
என்னவோ தெரியவில்லை-
தமிழர் இறைச்சி
இலங்கை புத்தர்களுக்கு
மிகவும் ருசிக்கிறது.
நிலத்தில் கொன்றவன்,
மானமகன்
இல்லையென்று
கடலிலும்
கொல்கிறான்.
சோழன் உழவுசெய்த
கடல் வயலை
எவனோ
கற்பழிக்கிறான்!
பலம் இல்லாத
எல்லாம்
அழிந்தே
போகும்.
இதோ..இதோ..
தமிழர் நீ நீ நீ ண்ட
வரலாறு
கண்முன்னே
கரைகிறதே..
**
நமக்கென்ன?
என்று
பேய்களை
நக்கி
வாழுங்கள்!!
அல்லது,
பணத்திற்கும்
புரியாணிக்கும்
அதிகாரத்தை
வில்லுங்கள்
புரியாத ஆணிகளே..
அல்லது,
"யாதும் ஊரே"
என்று
முழங்குவோம்
வாருங்கள்.
அகரன் பூமிநேசன்
22,01,2021

.jpeg
)





கருத்துகள் இல்லை