நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவுகள்!!


 நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிலிருந்து விடுவிக்கப்படுவதுடன், புதிதாக பல பகுதிகள் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்படுகின்றன.

 

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இந்த தீர்மானங்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி தனிமைப்படுத்தப்படும் பகுதிகளாக,

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அம்பலாந்தொட்ட, பிரதேச செயலகத்தைச் சேர்ந்த போலனா தெற்கு கிராம சேவகர் பிரிவு எண் 140 இல் உள்ள மக்கோனியா கிராமம்.

பூஜாபிட்டி சுகாதார மருத்துவ அலுவலர் பிரிவில் பல்லியகொடுவ மற்றும் கல்ஹின்ன கிராம சேவகர் பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊடங்கு உத்தரவு நீக்கப்படும் பகுதிகளாக,

கல்முனை வடக்கு கிராம சேவகர் பிரிவு

கல்முனை 1 C

கல்முனை 1 E

கல்முனை 2

கல்முனை 2 A

கல்முனை 2 B

கல்முனை 3 A

கல்முனை தெற்கு கிராம சேவகர் பிரிவு

கல்முனை 01 (M.D)

கல்முனை குடி 01

கல்முனை குடி 02

கல்முனை 03 (M.D)

மேலும், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட கல்முனை நகரில் கல்முனை மற்றும் கல்முனைக்குடி ஆகிய பிரதேசங்களிலுள்ள 11 கிராம சேவையாளர் பிரிவுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கல்முனை செய்லான் வீதி தொடக்கம் நகர வாடி வீட்டு வீதி வரை தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு 27நாட்கள் அமூலில் இருந்து வந்த நிலையில் நேற்று (24) மாலை 06மணி முதல் இப்பிரதேசம் தனிமைப்படுத்தல் ஊரடங்கில் இருந்து நீக்கம் பெற்றுள்ளதாக சுகாதார பிரிவினர் அறிவித்துதுள்ளனர்.

இதேவேளை, இராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் இருந்த இப்பிரதேச மக்கள் சுதந்திரமாக நடமாட்டத்துடன் காணப்படுவதுடன் கடைகள், பொதுச் சந்தை, பிரதான வீதிகளில் போக்குவரத்து, உள்வீதிகளின் போக்குவரத்து, அலுவலகங்கள் மற்றும் பிரதான பஸ் நிலையம் என்பன வழமையான நிலையில் இயங்குவதை அவதானிக்க முடிவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.