உண்ணாவிரதத்தில் குதித்த மக்கள்!!

 

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கோவில் மோட்டை பகுதியில் பாரம்பரியமாக அரச காணியில் காடுகளை துப்பரவு செய்து குளம் அமைத்து பொது மக்களால் விவசாய செய்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

குறித்த காணிகளை மத ஸ்தாபனம் ஒன்றுக்கு வழங்க முடிவு மேற்கொள்ளப்பட்டதை அடுத்தே இன்று காலை 9.00 மணி தொடக்கம் மடு பிரதேச செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

அப் போராட்டத்தில் கடந்த முப்பது வருடங்களாக கோவில் மோட்டை பகுதியில் விவசாய செய்கைகளை மேற்கொள்ளும் 27 குடும்பங்களை சேர்ந்த அங்கத்தவர்கள் கலந்து கொண்டு தமது நிலங்களை தமக்கே வழங்குமாறு கோரிக்கை முன்னெடுத்திருந்தனர்

அக்கிராம மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற நிலையில் கோவில் மோட்டை


பகுதியில் விவசாய செய்கைகளை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.பொது மக்களின் பயன்பாட்டிலிருந்து குளப்பகுதியினை மத ஸ்தாபனத்திற்கு வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முடிவினை எதிர்த்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்காணிகளை வேறுறொரு உரிமையாளருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டம் இடம் பெற்று வருகின்றது

இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.நந்தினி ஸ்ரான்லி டிமெல் கருத்து தெரிவிக்கையில்,

காணி தொடர்பான பிணக்கு பலவருடங்களாக நீடித்த நிலையில் அண்மையில் தன்னுடைய தலைமையில் மக்களின் ஆலோசனையின் பின்னர் அவர்களின் முன்மொழிவின் அடிப்படையில் தீர்வு வழங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மக்கள் போராட்டம் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது.

எனவே மக்களின் குழப்ப நிலை காரணமாக கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தி உயர் மட்ட முடிவுக்காக அனுப்பி வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.