மகனை கொன்றுதானும் தற்கொலை செய்த தாய்!


 தனது 5 வயது மகனை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்து, தாயாரும் உயிர்நீத்துள்ளார்.

கடன் தொல்லையினால் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

காலி, கந்தார பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தாரவத்த பகுதியில் கடந்த 23ஆம் திகதி இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

கணவன் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற பின்னர், இரவு வேளை தனது 5 வயது மகனை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.

உயிரிழப்பதற்கு முன்னர் அவர் கடிமொன்றை எழுதி வைத்துள்ளார்.

அதில், கடன் தொல்லையினால் தன்னால் வாழ முடியாமல் உயிரை மாய்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு பணிப்பெண்ணாக செல்வதற்கும் அவர் முயன்றதாகவும், பணம் கிடைக்காத நிலையில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.