யானையினை கொன்று தந்தம் எடுத்தவர்கள்; தந்தங்கள் துப்பாக்கியுடன் கைது!


முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட களிக்காடு காட்டுப்பகுதியில் தந்த யானை ஒன்ற சுடப்பட்டு தந்தங்கள் எடுக்கப்பட்ட நிலையில் இனம் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார்,முல்லைத்தீவு பொலீசார்,படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வேளை முள்ளியவளைப்பகுதியில் இரண்டு தந்தங்களுடனும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவரை இன்று 29.01.21 கைதுசெய்துள்ளார்கள்.
இவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது இவர்களிடம் விசாரணை இடம்பெற்று வரும் வேளை சட்டநடவடிக்கை எடுக்கும் நடவடிக்கைகளை முள்ளியவளை பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.