உடல்களை ஐ.நாவில் அடக்கம் செய்யுங்கள்!!


 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஐக்கிய நாடுகள் சபை ஆகிய சர்வதேச அமைப்புக்களின் தேவைக்கு ஏற்ப பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயல்படவில்லை. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவ்வாறே செயல்படுவார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் உள்ளக மட்டத்திலான தீர்மானங்களுக்கு முன்னுரிமை வழங்கிச் செயல்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய முடியும் என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. அவ்வாறாயின் உடல்களை அங்குகொண்டு சென்று புதைத்துக் கொள்ளலாம் இங்கு முடியாது. சுகாதாரத் தரப்பினரது தீர்மானங்களுக்கு அமையவே அரசாங்கம் செயல்படுவது கட்டாயமாகும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்க வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் குறிப்பிடும் கருத்துக்கு மதிப்பளியுங்கள். தேசிய வளத்தை பாதுகாக்க அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும். நாட்டுக்காக வீதியில் இறங்கிப் போராடவும் தயாராகவுள்ளோம்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தினர் குறிப்பிடுவார்களாயின் இறப்பவர்களின் உடல்களை விமானம் மூலம் கொண்டு சென்று அங்கு புதைத்துக் கொள்ளலாம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் மகாநாயக்க தேரர்களின் கருத்துக்கு மதிப்பளித்து சுயாதீனமாகச் செயல்படும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை, ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிடும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயல்படவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் செயல்படமாட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய வளங்களை விற்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றமை தவறு. தற்போதைய எதிர்க்கட்சியினர் அப்போது அதனை எதிர்க்கவில்லை.

பொதுஜன பெரமுன கடந்த அரசாங்கத்தில் எதிர்க்கட்சியாகச் செயல்பட்ட வேளை அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பாதுகாக்க முறையாகச் செயல்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி பலம் பெற்ற கட்சியாக எழுச்சிபெறும். தற்போது கட்சியில் தவறான நோக்கங்களைக் கொண்டவர்கள் உள்ளனர்.

கட்சி தூய்மைப்படுத்தப்பட்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுவேன் எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.