விபத்தில் படுகாயமடைந்தருந்த நபர் சிகிச்சை பலனின்றி மரணம்!


 செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தருந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று சாவடைந்தார்.

கடந்த 18 ஆம் திகதி செட்டிகுளம் நகர்பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் வீதியை கடக்க முற்பட்டபோது மதவாச்சியில் இருந்து மன்னார் பகுதி நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அவர் சாவடைந்தார்.

குறித்த சம்பவத்தில் செல்லப்பன் ராச்குமார் வயது 54 என்ற நபரே சாவடைந்துள்ளார்.

விபத்து தொடர்பாக திடீர் மரணவிசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.