தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூன்றாம் நாள் இன்று!


 தேசிய கொவிட்-19 தடுப்பசி செலுத்தும் திட்டத்தின் மூன்றாம் நாள் இன்றாகும்.

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை நேற்றைய தினம் நாடு முழுவதும் 32,539 பேர் பெற்றுள்ளனர்.

மேல் மாகாணத்தில் தேசிய தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் முதல் நாளில் 5,286 நபர்கள் கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களை பெற்றனர்.

அதன்படி இதுவரையான காலப் பகுதியில் நாட்டில் மொத்தம் 37,825 நபர்கள் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர்.

இந் நிலையில் இன்று மேலும் 7,500 இராணுவ வீரர்கள் கோவிஷீல்ட் தடுப்பூசி அளவைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.