தமிழகத்தில் பெப்ரவரி 28வரை தளர்வுகளுடன் முடக்கம் நீடிப்பு!


 தமிழகத்தில் பெப்ரவரி 28ம் திகதி வரை தளர்வுகளுடன் கூடிய முடக்கம் நீடிக்கப்பட்டுள்ள அதேவேளை கல்லூரிகள் அனைத்தும் முழுமையாக இயங்கவும் அரசு அனுமதியளித்துள்ளது.


கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்ட முடக்கம் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் தமிழகத்தில் பெப்ரவரி 28ம் திகதி வரை தளர்வுகளுடன் கூடிய முடக்கம் நீடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.


தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால், நோய்த் தொற்று விகிதம் கடந்த இரண்டு வாரமாக, ஒரு சதவிகிதமாக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் தொிவித்துள்ளாா்.


கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சுமார் 550 நபர்களுக்கு கீழாகவே உள்ளது எனவும் வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் பொது முடக்கம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளுடன், 28.2.2021 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீடிக்கப்படுவதாக அவா் தொிவித்துள்ளாா்.


மேலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியில், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் , பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான (பட்டயப் படிப்பு உட்பட) அனைத்து வகுப்புகளும் 8.2.2021 முதல் தொடங்க அனுமதிக்கப்படுவதுடன் அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது எனவும் அவா் தொிவித்துள்ளாா்.


அத்துடன் பாடசாலைகளில் 9 மற்றும் 11ஆம் வகுப்புகள் மட்டும் 8.2.2021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க அனுமதிக்கப்படுவதாகவும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் வங்கிகள், நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்கப்படுவதாகவும் அவா் தொிவித்துள்ளா்ா.


தெ்துடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 100 சதவிகித இருக்கைகளை பயன்படுத்தி எதிா்வரும் பெப்ரவாி முதலாம் திகதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன எனவும் தொிவித்துள்ளாா.


மேலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, விளையாட்டு நிகழ்ச்சிகளில் (கிரிக்கெட் உட்பட), அதிகபட்சம் 50 சதவிகிதம் இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.


மத்திய உள் துறை அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது


தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் எனவும் மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.