இலங்கையின் கொரோனா எண்ணிக்கை 59,000 ஐ கடந்தது!


 இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 59,000 ஐ கடந்துள்ளது.

நேற்று 737 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 59,167 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கண்டறியப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை 55,288 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 65 வைத்தியசாலைகளில் 8,543 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, 653 நபர்கள் வைத்தியசாலைகளில் இருந்து குணமடைந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 50,337 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, 683 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் உள்ளனர்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் விரைவாக மேலெழுந்து வரும் இலங்கை, தற்போது உலகளவில் 92வது இடத்தில் உள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.