மேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை!


 மேல்மாகாணத்தில் இன்று(28) முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை பின்பற்றாத நபர்கள் அனைவருக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து சோதனை நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இன்றைய பௌர்ணமி தினத்தை முன்னிட்டும், எதிர்வரும் வார இறுதி தினங்களை கருத்திற் கொண்டும் மேல்மாகாணத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில், கொழும்பிலிருந்து தூர பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகள், முகக்கவசம் அணியாது இருப்பவர்கள் , காலி முகத்திடல் உட்பட பொது இடங்களில் நடமாடித்திரியும் நபர்கள் , மீன் மற்றும் மரக்கறி சந்தைகள், பல்பொருள் அங்காடிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் இருக்கும் மக்களை இலக்கு வைத்து அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதனால் இந்த செயற்பாடுகளுக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.