கொவிட் தடுப்புக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்துகள்!

 


கொவிட் தடுப்புக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தம்மிக்க பாணி தொடர்பில் எதிர்வரும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் இறுதி முடிவை அறிவிக்க எதிர்பார்ப்பதாக ஒளடத தயாரிப்பு மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற மருந்து உற்பத்திகளை ஆய்வுச் செய்ய அரசாங்கம் சகல வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அவ்வாறான மருந்து உற்பத்திகளை ஊக்குவிப்பது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (24) காலை தெரண அருண நிகழ்ச்சியில் பேசிய போதே பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

´கேகாலை தம்மிக்க பண்டார தயாரித்த கொவிட் ஒழிப்பு உள்நாட்டு மருந்து உள்ளிட்டவைகள் குறித்த விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் இடம்பெறுகின்றன. அவை தொடர்பான பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே அரசாங்கம் என்ற வகையில் எமது கடமை. அவ்வாறு இல்லாது எந்தவொரு மருந்து உற்பத்தியும் ஊக்குவிக்கப்படாது. இதன் நன்மை தீமைகளை நாட்டுக்கு அறிவிப்போம். தம்மிக்க பண்டார தயாரித்த பாணி குறித்து இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி முடிவு எடுக்க முடியும் என நம்புகின்றேன்.´

இதேவேளை நாட்டில் எவ்வாறு கொவிட் தடுப்பூகளை வழங்குவது என்பது குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார்.

´ஒக்ஸ்போட்´ தயாரிப்பான எஸ்ட்ரா செனெகா தடுப்பூசி முதன் முதலில் இலங்கைக்கு கிடைக்கும். அதன் பின்னர் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்வோம். இதற்கிடையில் ரஸ்ய தடுப்பூசி பெறுவதற்கான பேச்சுவார்த்தைககள் இடம்பெற்று வருகின்றன. பற்றாக்குறை ஏற்படின் அவற்றை பணம் கொடுத்து வாங்க நடவடிக்கை எடுப்போம்´ என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.