ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை மேலும் குறைந்தது!


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 903 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 4 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் ஒருகோடியே 1 இலட்சத்து  28 ஆயிரத்து 457 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 2 இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொற்றாளர்கள் அதிகமாக குணமடையும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. மேலும் நேற்று ஒரேநாளில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 51 ஆயிரத்து  564 ஆக அதிகரித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.