அதி சொகுசு பேருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி!


 பொது மக்கள் அனைவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், பிரதான நகரங்களில் உள்ள வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும் வினைத்திறனான 200 அதி சொகுசு பேருந்துகளை உள்ளூர் கம்பனிகள் ஊடாக விலைமனுகோரல் அடிப்படையில் கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் நெரிசல் மிகுந்த நகர்ப்பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய பொதுப் போக்குவரத்து சேவை மற்றும் வாகனங்களைத் தரித்து வைக்கக்கூடிய வசதிகளுடன் கூடியதாக ஆரம்பிப்பதற்கு வாகன ஒழுங்குபடுத்தல்கள் பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரத பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன உற்பத்தி இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது காணப்படும் பேரூந்துகளை விட மேலும் சொகுசு வசதிகளுடன் கூடிய குறுந்தூரப் போக்குவரத்துக்குப் பொருத்தமான 200பேரூந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய தேவையுள்ளது.

அங்கீகாரம் பெற்ற உள்ளூர் கம்பனி மூலம் மட்டுப்படுத்தப்பட்ட உள்ளூர் போட்டிப் விலைமுறிக்கோரலைப் பின்பற்றி உயர்ந்த ரக புதிய 200 பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.