சுமந்திரனுக்கு கொரோனா தொற்று இல்லை என அறிவிப்பு!


நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணியதாக அறியப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தலதா அத்துகோறள ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவரோடு தொடர்புகளைப் பேணிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அத்தோடு, அவர்களுக்கு பி.சீ.ஆர். பாிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், இதுவரையில் வெளியாகியுள்ள பி.சி.ஆர் முடிவுகளின் பிரகாரம், நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தொிவிக்கப்படுகின்றது.

கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்புடையவராக அடையாளம் காணப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.