மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்ட 12 வயது சிறுமி!


 மட்டக்களப்பில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு பெரியகல்லாறு -2 நாவலர் வீதி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை க.கஸ்மினா எனும் சிறுமி ஒருவர் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி , தாய் வெளிநாடு சென்ற நிலையில் தனது தாயின் சகோதரியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த சிறுமி இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.