மேலும் 30 இலட்சம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய திட்டம்!


இந்தியாவிடமிருந்து மேலும் 30 இலட்சம் தடுப்பூசி மருந்தை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழமை) காலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவால் தயாரிக்கப்படும் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்காக இலங்கை அரசாங்கத்தால் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம் நாளை முதல் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆறு வைத்தியசாலையில் தொடங்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த வைத்தியசாலைகளில் சுமார் 25 சதவீத ஊழியர்களுக்கு திட்டத்தின் தொடக்கத்தில் தடுப்பூசி போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.