போலந்தில் ஆர்ப்பாட்டம்!


கருக்கலைப்புக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போலந்தின் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சட்டம் அமுலுக்கு வருவதன் மூலம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் மற்றும் முறையற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே கருக்கலைப்பு செய்யப்படும்.

இதனால், இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வார்ஷா பகுதியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கறுப்பு ஆடைகள் அணிந்தும், கறுப்பு கொடிகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘நான் நினைக்கிறேன்’, ‘நான் உணர்கிறேன்’, ‘நான் தீர்மானிக்கிறேன்’ மற்றும் ‘பயங்கரவாதமின்றி தேர்வு செய்யும் சுதந்திரம்’ போன்ற பதாதைகளை ஏந்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் சிவப்பு எரிப்புகளை ஏற்றி, வானவில் கொடிகளை அசைத்து, போக்குவரத்தை நிறுத்தினர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதன்கிழமை அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் சட்டம் வெளியிடப்பட்ட பின்னர், கிட்டத்தட்ட எல்லா சூழ்நிலைகளிலும் கருக்கலைப்பு செய்வதற்கான தடை போலந்தில் நடைமுறைக்கு வர உள்ளது.

இந்த நடவடிக்கை, முதலில் ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்டது, பின்னர் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் பரவலான எதிர்ப்புக்கள் காரணமாக தாமதமானது. சர்ச்சைக்குரிய சட்டம் போலந்தின் ஜர்னல் ஒஃப் லாஸில் வெளியிடப்பட்டது. இது சட்டமாக மாறுவதற்கான கடைசி படியாகும்.

போலந்தில் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் சில கடுமையான கருக்கலைப்புச் சட்டங்கள் இருந்தன. மேலும், ஒவ்வொரு ஆண்டும் 200,000 கருக்கலைப்புகள் சட்டவிரோதமாக அல்லது வெளிநாடுகளில் செய்யப்படுகின்றன என்று பெண்ணிய அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.