2021ஆம் ஆண்டு ஐ.பி.எல். - விடுவிக்கப்பட்ட வீரர்களின் விபரம்!


நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அணி வீரர்களை தக்கவைப்பது, விடுவிப்பது குறித்த தகவல்களை எட்டு அணிகளும் வெளியிட்டுள்ளது.

அத்துடன் சில அணிகள் மற்ற அணிகளுக்கு வீரர்களை மாற்றம் செய்யலாம்.

அந்த வகையில் டெல்லி கெபிடல்ஸ் அணி, இரண்டு சகலதுறை வீரர்களான டேனியல் சாம்ஸ், ஹர்ஷல் பட்டேல் ஆகியோரை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கொடுத்துள்ளது.

இதுதவிர டெல்லி அணி, மோஹித் சர்மா, கீமோ போல், சந்தீப் லேமேச்சன், அலெக்ஸ் கெர்ரி, ஜேஸன் ரோய், துசார் தேஷ் பாண்டே ஆகியோரை விடுவித்துள்ளது.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தற்போதைய அணித்தலைவராக இருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தை அணியில் இருந்து விடுவித்துள்ளது. இந்த நிலையில் புதிய அணித்தலைவராக சஞ்சு சம்சனை நியமித்துள்ளது.

மேலும், டொம் கர்ரன், வருண் ஆரோன், ஒசேன் தோமஸ், அகாஷ் சிங், அனிருத்த ஜோஸி, அன்கிட் ராஜ்புட், ஷாசங் சிங் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியிலிருந்து சஞ்சய் யாதவ், பவன்கா சந்தீப், பில்லி ஸ்டேன்லேக், பெபியன் அலென், பிரித்வி ராஜ் ஆகியோரை விடுவித்துள்ளது.

அனைவருக்கும் சற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில், உரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, ஓய்வுப் பெற்றுள்ளார்.

மேலம், மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து நாதன் குல்டர் நைல், ஜேம்ஸ் பட்டின்சன், செர்பேன் ருத்தர்போர்ட், மிட்செல் மெக்லிகன், பிரின்ஸ் பால்வான்ட் ராய், டிக்விஜய் தேஸ்முக்த் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியிலிருந்து டொம் பென்டொன், கிறிஸ் கிரீன், சித்திஷ் லெட், நிகில் நாய்க், சித்தார்த், ஹரி குர்னே, அலி கான் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலிருந்து நட்சத்திர வீரர் க்ளென் மேக்ஸ்வெல், செல்டோன் கொட்ரேல், கிறிஸ்னப்பா கௌதம், முஜிப்புர் ரஹ்மான், ஜேம்ஸ் நீஷம், ஹர்டுஸ் வில்ஜோன், கருண் நாயர், சுச்சித், தஜிந்தர் சிங் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ஹர்பஜன் சிங், கேதர் ஜதவ், முரளி விஜய், பியூஷ் சாவ்லா, மோனு குமார் சிங் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுரேஷ் ரெய்னா அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.