யாழ். நகரப் பகுதியில் விசேட சுற்றிவளைப்பு!


யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் பொலிஸாரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்துவதற்காகவும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பிரதான நகரங்களில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, இன்று யாழ்ப்பாண நகரில் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.