விகாரைக்கான அடிக்கல் நாட்டினார் இராணுவத் தளபதி!


 வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியையும் இணைத்து திஸ்ஸ விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று சமய வழிபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது .

100 அடி உயரத்தில் காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் நிரந்தக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

இந்த நிலையில் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்க இன்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நடப்பட்டுள்ளது .

தையிட்டி பெண்கள் காவலரனுக்கு அருகாமையில் இந்த விகாரை தனியார் காணியில் அமைக்கப்படவுள்ளது .

அந்தக் காணி திஸ்ஸ விகாரைக்குரிய காணி என தெரிவிக்கப்பட்ட போதும் அதனுடன் இணைந்து தனியார் காணிகள் விடுவிக்கப்படாமல் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.