நாடாளுமன்றம் சபாநாயகர் தலைமையில் இன்று கூடுகிறது!


நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற சபை அமர்வை 2 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

4 நாடகளுமன்ற உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில், அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் பியல் நிஷாந்த உள்ளிட்டோர், நாடாளுமன்ற உறுப்பினரான ரவுப் ஹக்கீம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.