பிக்பொஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை!


 கன்னட பிக்பாஸ் சீசன் 3-யில் பங்கேற்ற நடிகை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கன்னட பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் நடிகை ஜெயஸ்ரீ ராமையா. அந்த சீசனில் பங்கேற்ற ஜெய ஸ்ரீக்கு அவர் எதிர்பார்த்ததுபோல வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவும் இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு 22-ஆம் தேதி அன்று, ஜெய ஸ்ரீ அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தற்கொலை எண்ணம் குறித்த ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், “ நான் முடித்துக்கொள்கிறேன். இந்த உலகத்துக்கும் மன அழுத்தத்திற்கும் குட் பாய்” என்று பதிவிட்டார்.

இந்த ஃபேஸ்புக் பதிவு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அந்தப் பதிவை நீக்கிய அவர், அதன் பின்னர் தான் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக பதிவிட்டார். இந்நிலையில் அவர் இன்று பெங்களூரு, மகடியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான Uppu Huli Kara படத்தில் அறிமுகமான இவர் Malashree) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.