தேடல் - கவிதை!!

 


நித்திய காலத்தில்

அதியுன்னதமான ஒரு ராகத்தில்

உனை மீட்டப் போகின்றேன் 

என் புன்னகையின் சிதிலங்களாக

கனத்துக் கிடக்கும் உன் நினைவுகள்

ஆலிங்கனம் செய்து மறைந்து

கொள்கின்றன 

ஈரம் கோர்த்த நிலமாக

ஊமைக் காயம் சுமந்து

பிஞ்சு மனம் மாறாத பாவையாய்

சத்தமின்றி ஓடும் சர்ப்பத்தைப்போல்

மௌன ராகம் மீட்டுகிறேன் 

இப் பிரபஞ்சக் காத்திருப்பில்

நேசப் பிரவாகத்தோடு

உனைத்தேடிக் களைத்துப்போன மனம்

இலவம் பஞ்சாக வெடித்துப் பறக்கிறது 

நீண்டு செல்லும் பாதையோரத்தில்

என் தேடல்களுக்குள்

இலக்கணப் பிழையின்றி

மூலிகை வாசமாக உன் நினைவுகள் 

மரங்கொத்திப் பறவையின் சொண்டில்

ஒட்டிக் கொண்ட மரத் துகள்களாய்

என் சொப்பனத்திலும் உன் உருவம்

கலந்ததால்

வெற்றிக்கனி பறித்த மகிழ்ச்சி 

காசித்தும்பையின் வாசனையோடு

சிலிர்த்திடும் தென்றலில்

சுணைக்கும் உன் நினைவுகளை சுமந்து

திருவிழா முடிந்தும் காட்சியைத் தேடும்

சிறுபிள்ளையாய் இவள்....

💕பிரபாஅன்பு💕Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.