நினைவுத்தூபி கட்டுமானப்பணிகள் தொடர்பில் வெளியாகிய தகவல்!


 யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடிக்கப்பட்டிருந்தது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டங்களின் விளைவாக மீண்டும் கட்டிக்கொடுக்கப்படுவதாக துணைவேந்தரால் வாக்குறுதி வழங்கப்பட்ட பின்னர் போராட்டம் கைவிடப்பட்டு, தமிழ் சமூகத்தினரால் தொடர்ச்சியாக அவதானிக்கப்படு வருகிறது.

இந்த நிலையில், குறித்த தூபியின் கட்டுமான பணிகள் ஒரு சில நாட்களுக்கு முன்னர் மாணவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த கட்டுமானப்பணிகளின் ஆரம்பகட்ட வேலைப்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக அத்திவாரம் வெட்டப்பட்டு அளவுக்கயிறுகளும் ஆங்கே கட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.