கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் தொழிலாளி பலி!!

 


யாழ்.அளவெட்டிப் பகுதியில் பழைய கட்டிடம் ஒன்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.


சம்பவத்தில் அளவெட்டி மேற்கைச் சேர்ந்த மகாதேவன் பிரகலாதன் , வயது 40 என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.


வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியர் தமது காணியில் ஏற்கனவே அமைந்திருந்த பழைய கட்டிடத்தை அகற்றும் அதே நேரம் புதிய கட்டிடமும் அமைக்கப்படுகின்றது.


இந்த பணிகள் பல நாட்களாக இடம்பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் பணி இடம்பெறும்போது மாலை 4மணியளவிலியே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


இதன்போது பாதிக்கப்பட்டவர் உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துவிட்டதாக


மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.