மெதபிட்டமின் எனப்படும் போதை குளிசைகள் சிக்கின!


 பெல்ஜியம் நாட்டிலிருந்து அஞ்சல் மூலமாக கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த 13 அரை கோடி ரூபாய் பெறுமதியான மெதபிட்டமின் என அழைக்கப்படும் 18,000 போதை குளிசைகள் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆசியாவில் கைப்பற்றப்பட்ட அதிக தொகையான போதை குளிசைகள் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு உணவுகள் என்ற போர்வையில் இந்நாட்டிற்கு குறித்த போதை குளிசைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ஹப்புத்தளையில் முகவரி ஒன்றுக்கே குறித்த போதை குளிசைகள் முகவரியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.