கனடாவில் பண்ணை ஒன்றில் எட்டு பேருக்கு கொரோனா!


 தனது விலங்குப் பண்ணையில் கொரோனா பரவியதால் 1,000 விலங்குகளை கொல்ல கனேடியர் ஒருவர் முடிவு செய்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள mink என்னும் விலங்குகளை வளர்க்கும் ஒருவரது பண்ணையில் பணி புரியும் எட்டு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

எங்கிருந்து இந்த கொரோனா பரவியது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பண்ணையிலுள்ள mink விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையில், பண்ணையிலுள்ள 15,000 விலங்குகளில் இறந்த 200 விலங்குகளுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

ஆகவே, தன் பண்ணையிலுள்ள 1,000 விலங்குகளை கொல்வது என முடிவு செய்துள்ளார் அந்த பண்னையின் உரிமையாளர்.

கனடாவின் தலைமை கால்நடை மருத்துவரான Dr. Rayna Gunvaldsen இது குறித்து பேசும்போது, அரசு அந்த விலங்குகளைக் கொல்ல உத்தரவிடவில்லை என்றும், அது அந்த பண்ணையின் உரிமையாளரின் தனிப்பட்ட முடிவு என்றும் தெரிவித்தார்.

உலகின் பல நாடுகளில் கொரோனா பரவல் காரணமாக பல மில்லியன் mink வகை விலங்குகள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.