யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இரண்டு இளைஞர்கள்!


 யாழ் நகரில் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து, நகரில் நேற்றிரவு சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட பொலிசார் இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 5 கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.

குருநகர், மானிப்பாய் பகுதிகளை சேர்ந்த இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.