நேற்று 515 கொரோனா தொற்றாளர்கள்!
நேற்று நாட்டில் 515 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணபபட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,371 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 419 பேர் மினுவங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 83 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
மினுவங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,628 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 13 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
மூன்று வெளிநாட்டினர் உட்பட 7,443 பேர் தற்போது நாடு முழுவதும் 66 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று, 562 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36,717 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்று சந்தேகத்தில் 586 பேர் தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.
கருத்துகள் இல்லை