காலை வெட்டியெடுத்து சென்ற ரௌடி சிக்கினார்!
திரைப்பட வில்லன்களை விட மிக மோசமான ரௌடியொருவரை பொலிசார் அண்மையில் சுட்டுக் கொன்றுள்ளனர். வழக்கம் போல, ரௌடி தப்பியோட முயன்றார் நாம் சுட்டோம் என்பதை போல ஒரு காரணத்தை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வெயாங்கொட பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் நிஷாந்த குமரிசிரி என்பவரே கொல்லப்பட்டார்.
வெயாங்கொட மாளிகதென்ன பகுதியில் வசிக்கும் சுனந்த ஜெயலத்ய (44). மூன்று பிள்ளைகளின் தந்தையான சுனந்த கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பகுதியிலுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரனான நிஷாந்தவும், சுனந்தவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
கொழும்பிலிருந்து நிஷாந்தவுக்கு கஞ்சா கொண்டு வந்த இருவரை பொலிசார் கைது செய்திருந்தனர். பொலிசாருக்கு இது குறித்த தகவலை, சுனந்த தான் இரகசியமாக கொடுத்தார் என நிஷாந்தவுக்கு வலுவான சந்தேகம் இருந்தது.
டிசம்பர் 19ஆம் திகதி, சனிக்கிழமை.
வீட்டில் பழுதுபார்க்கும் வேலையை சுனந்த தனது 15 வயது மகனுடன் மேற்கொண்டார். சீமெந்து வாங்க வேண்டுமென்பதால், காலை 10.30 மணியளவில் மாளிகதென்னா சந்தியில் உள்ள ஒரு கடைக்கு முச்சக்கர வண்டியில் சென்றார்.
சுனந்த கடையில் நிற்கும் தகவலை அறிந்த நிஷாந்த, இன்னொரு நண்பரையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றார். அவர்கள் இருவரிடமும் வாள்கள் இருந்தன. ஏராளமானவர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது, சுனந்தவை கொடூரமாக தாக்கினர். 15 வயது மகன் பார்த்துக்கொண்டிருந்தபோது, சுனந்தாவின் ஒரு காலை வாளால் வெட்டி துண்டித்தார் நிஷாந்த.
சினிமா பாணியில், துண்டிக்கப்பட்ட காலுடன் தப்பிச் சென்றார்.
இருப்பினும், அங்கிருந்தவர்கள் சுனந்தவை உடனடியாக வாதுபிட்டிவல வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். மிகப்பலத்த காயமடைந்திருந்ததால், அவர் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சுனந்தவின் கால்களில் ஒன்று துண்டிக்கப்பட்டது. மற்றொன்று கால் மற்றும் கை கடுமையாக வெட்டப்பட்டிருந்தன.
இரண்டு நாட்களுக்குப் பிறகு- 21 ஆம் திகதி, மாளிகதென்னவில் உள்ள ஒரு வழிபாட்டிடத்திற்கு அருகே, கருப்பு பையில் சுற்றப்பட்ட நிலையில் சுனந்தவின் கால் மீட்கப்பட்டது. இதற்குள் நாய்கள் அதை கடுமையாக சேதமாக்கியிருந்தன.
நிஷாந்தாவின் காலை பொலிசார் கண்டுபிடித்தனர். அதற்குள், கால் நாய்களால் இழுத்துச் செல்லப்பட்டது.
23 ஆம் திகதி குருவிட்ட பேருந்து நிலையத்தில் 2 கிராம் போதைப்பொருளுடன் ஒரு கடத்தல்காரன் கைது செய்யப்பட்டான். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுனந்தவின் காலை துண்டித்தவர், அவர்தான் என்பது தெரிய வந்தது.
அவரிடம் தொடர்ந்த விசாரணையில் வெளிநாட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகள், ஒரு ஜெலிக்னைட் குச்சி மற்றும் ஒரு டெட்டனேட்டர் ஆகியவை வெயாங்கொட, ஹல்கம்பிட்டி பகுதியில் ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. சுனந்தவைத் தாக்கிய ஆயுதங்கள் உடுகம கல்லறையில் எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சந்தேக நபர் அப்போது தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நிஷாந்தவை வாகனமொன்றில் ஏற்றிக் கொண்டு பொலிசார் சென்றனர். வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வாகன சாரதியை தனது கைவிலங்கை பயன்படுத்தி கழுத்தை நெரிக்க முயன்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
நிஷாந்தவுடன் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டர் அஜித் மற்றும் கான்ஸ்டபிள் அமில ஆகியோர் சந்தேக நபருடன் மல்லுக்கட்டியதாகவும், நிலைமையை கட்டுப்படுத்த பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, நிஷாந்த காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றதாகவும், பொலிசார் மீண்டுமொரு சூட்டை நிஷாந்தவை நோக்கி சுட்டதாகவும் கூறுகின்றனர்.
காயமடைந்த நிலையில் வாதுப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிஷாந்த உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர். அண்மை நாட்களில் பொலிசாரின் பிடியிலிருந்த இதேவிதமாக ரௌடிகள் தப்பியோட முயல்வது ஆச்சரியமான விடயம்தான்.
நிஷாந்த போதைப்பொருள், கஞ்சா மற்றும் கசிப்பு கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டார். அவர் மீது பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில் மூன்று வழக்குகள் கம்பஹா உயர்நீதிமன்றத்திலும், இரண்டு வழக்குகள் மாராவில மற்றும் குளியாபிட்டி நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளன. அவரது சட்டப்பூர்வ மனைவியைத் தவிர, நிஷாந்தவுக்கு மற்றொரு முறைகேடான மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட ரௌடி நிஷாந்த
நிஷாந்த குமாரசிரியின் தந்தையும் போதைப்பொருள் உட்பட பல மோசமான குற்றங்களில் ஈடுபட்டார். குற்ற வாழ்க்கையை வாழ்ந்தார். மிஸ்டர் போஸ்டல் என்று பிரபலமாக அறியப்பட்ட நிஷாந்தவின் தந்தை பல திருமணங்களை செய்திருந்தார். தனது கள்ளக்காதலியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக அவர் பொலிஸாரால் கைதுசெய்யப்படும் நிலை உருவானதும், சில வருடங்களின் முன் விசம் அருந்தி தற்கொலை செய்தார்.
கோட்டாபய ஜனாதிபதியான பின்னர், கடந்த ஆண்டு பொலிசாரால் கொல்லப்பட்ட ஆறாவது நபர் நிஷாந்த ஆவார். பொலிசார் வழக்கம் போல, அவர் தப்பியோட முயன்றபோது கொல்லப்பட்டதாக கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை