வனஜீவராசிகள் திணைக்களத்தை சேதப்படுத்திவருக்கு விளக்கமறியல்!


 பாணம வனஜீவராசிகள் திணைக்கள கட்டிடத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டுக்காக ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் பாணம பகுதியில் சிறுத்தை ஒன்றின் தாக்குதல் காரணமாக விவசாயியொருவர் உயிரிழந்தமையினால் கோபமடைந்த பிரதேச வாசிகளில் ஒரு குழுவினர் பாணம வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு சேதம் விளைவித்தனர்.

இந் நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு ஐந்து சந்தேக நபர்களை கைதுசெய்த பொலிஸார், அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும், முச்சக்கர வண்டியொன்றையும், துவிச்சக்கர வண்டியொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதான சந்தேக நபர்களை நேற்று பொத்துவில் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவர்களை ஜனவரி 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.