'ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா தடுப்பூசி திறன்மிக்கது'!


 நாட்டில் தற்போது வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி திறன்மிக்க தடுப்பூசியாகும். இதனை அனைவரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என தொற்று நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் கேசவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுதல் நேற்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, இன்றைய தினம் வடக்கு மாகாணத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பாதுகாப்பான தடுப்பூசியாகும். இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது. பக்கவிளைவுகள் மிக மிக குறைவு. இது மிகவும்  திறன்மிக்க தடுப்பூசி. எனவே பொதுமக்கள் அனைவரும் போட்டுக் கொள்வது முக்கியம் என வேண்டுகோள் விடுகிறேன் என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சுருக்கமாக நான் ஒன்றை கூற விரும்புகின்றேன். நான் என்னை நேசிக்கின்றேன். எனது குடும்பத்தை நேசிக்கின்றேன். எனது சமூகத்தை நேசிக்கின்றேன். எனது நாட்டை நேசிக்கிறேன். அதனால் நான் தடுப்பூசி போடுகின்றேன். இதனை ஒவ்வொருவரும் மனதில் கருதி, அனைவரும் இந்த தடுப்பூசியினை போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.