மனங்கொத்திப்பறவை நாயகிக்கு நாளை திருமணம்!!

 


சிவகார்த்திகேயன் பட நடிகை ஒருவருக்கு நாளை திருமணம் நடைபெற இருப்பதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்


சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த திரைப்படங்களில் ஒன்று ‘மனம் கொத்தி பறவை’. இந்த படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மியா. இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்பதும் இது பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது


நடிகை ஆத்மியாவை திருமணம் செய்ய இருப்பவர் சனூப் என்பவர் என்பதும் இவர் கப்பலில் பணி செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு ஜனவரி 25ஆம் தேதி அதாவது நாளை கேரளாவில் உள்ள கண்ணூர் என்ற பகுதியில் நடைபெற உள்ளது


ஜனவரி 25ஆம் தேதி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நடைபெற இருப்பதாகவும் அதில் திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. திருமணத்துக்கு பின்னரும் நல்ல வாய்ப்பு கிடைத்தால் நடிக்க சம்மதம் என்றும் தான் நடிக்க சனூப் சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும் கூறியுள்ள ஆத்மிகா தற்போது இரண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.