கட்டாகாலி நாய்கள் தொடர்பில் வெளியான தகவல்!


 மன்னாரில் மக்கள் நடமாடும் இடங்களில் கட்டாகாலி நாய்கள் திரிவதாகவும் இதனால் மக்களுக்கு நோய்கள் பரவும் ஆபத்து காணப்படுவதாகவும் சமூக ஆர்வர்கள் தெரிவிக்கின்றனர்.

மஹிந்த சிந்தனையில் நாய்களை கொல்லக்கூடாது என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது.

எனினும் மனிதனுக்கு தீங்கு மற்றும் நோய்களை பரப்பக்கூடிய குட்டை பிடித்த விசர் பிடித்த பிடிக்கப்போகின்ற பல நாய்கள் மக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் எவரது கட்டுப்பாடுகளும் இன்றி வீணீர் வடித்துக்கொண்டு திரிகின்றதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நாய்களின் வீணீர் கிருமிகள் மிகவும் ஆபத்தானவை. கடந்த காலங்களில் விசர்நாய் கடிக்கு பலர் இறந்துள்ளார்கள், அதனை நாம் சாதாரணமாக மறந்து விடவும் முடியாது.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தயவு செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் இது சாதாரணமான விடயமாக இருப்பினும் அதன் விளைவுகள் பாரதூரமானவை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.