வவுனியாவில் இன்றையதினம் தடுப்பூசி செலுத்தப்பட்டது!


 வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு இன்றையதினம் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது.

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கோவிட்-19, “கோவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடக்குமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்றும் பணி இன்று தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் நேற்றுவழங்கப்பட்டது. ,அதனை செலுத்தும் பணிகள் வவுனியா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.