மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!


 வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் அது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டு, வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதேபகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆ.யேசுதாசன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, ஈச்சங்குளம் பொலிசாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.