பனிச்சறுக்கு விளையாடச் சென்றபோது மாயமான கனேடிய இளைஞன்!


 பனிச்சறுக்கு விளையாடச் சென்றபோது கனடாவைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞன் ஒருவன் வழி தவறிப்போய்விட்டான்.

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த அந்த இளைஞன் சனிக்கிழமை மாலை மணி 6.15 வாக்கில் தான் வழி தவறிவிட்டதை புரிந்துகொண்டான்.

அதே நேரத்தில், அவன் காணாமல்போய்விட்டதை அறிந்த அவனது குடும்பத்தினர், உடனே பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

மீட்புக்குழுவினர் அந்த இளைஞனைத் தேடி புறப்பட்ட நிலையில், அவனது பனிச்சறுக்கு வாகனம் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதைக் கவனித்து அங்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி, அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தான் வழிதப்பிவிட்டதை உணர்ந்துகொண்ட அந்த இளைஞன், தனது பனிச்சறுக்கு வாகனத்தை, தேடி வருபவர்கள் கண்ணில் படும் வகையில் நிறுத்திவைத்துவிட்டு, பனியில் குகை ஒன்றை தோண்டியிருக்கிறான்.

அழகான ஒரு குகையை தோண்டி, அதற்குள் பாதுகாப்பாக அமர்ந்துகொண்டு, தான் கொண்டு சென்ற உனவையும் தண்ணீரையும் அருந்திக்கொண்டு ரிலாக்சாக அவன் உட்கார்ந்திருப்பதைக் கண்ட மீட்புக் குழுவினர் ஆச்சரியத்தில் திளைத்துள்ளனர்.

தான் கற்ற பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக பயன்படுத்தி அவன் பத்திரமாக இருந்ததற்காக அவனை வெகுவாக பாராட்டியுள்ள மீட்புக் குழுவினர், அவன் தங்கள் வேலையை எளிதாக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத துவக்கத்தில், கலிபோர்னியாவைச் சேர்ந்த Nicolas Stacy-Alcantara என்ற ஒரு 17 வயது இளைஞனும், இதேபோல் உத்தாவிலுள்ள பனிச்சறுக்கு பகுதியில் ஒரு குகையை அமைத்துக்கொண்டு 30 மணி நேரம் பாதுகாப்பாக இருந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.