சசிகலா சக்கர நாற்காலியில் அழைத்து செல்லப்படும் காட்சி!


 பெங்களூரு சிறையில் சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவர் சசிகலா தான், அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு, மிகப் பெரிய மாற்றத்தை அரசியலில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சிறையில் இருக்கும் சசிகலா, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின், வரும் 27-ஆம் திகதி விடுதலையாகவுள்ளார், அது கிட்டத்தட்ட உறுதியாகவிட்டது.

இந்நிலையில், திடீரென்று சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தி வெளியானது, அதன் பின் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், கொரோனா இல்லை என்றும் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி அவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சிறையில் இருக்கும் சசிகலா சக்கர நாற்காலியில்பௌரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சி வெளியாகியுள்ளது.

மேலும், சசிகலாவுக்கு மூச்சுத் திணறல் உள்ளதால், அவருக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி , சர்க்கரை நோய், தைராய்டு, இருமல் மற்றும் காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாக, மருத்துவமனை இயக்குனர் மனோஜ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.