10 போத்தல் கசிப்புடன் சிக்கிய கசிப்பு ராணி!


 மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் 10 போத்தல் கசிப்புடன் இன்று (17) காலையில் கைது செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய இன்று காலை கதிரவெளியிலுள்ள வீடு ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்து தேடுதலில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை 10 போத்தல் கசிப்புடன் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.